ETV Bharat / state

ஓய்வுபெற்றார் டிஜிபி பிரதீப் பிலிப்: ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது உடனிருந்தவர்! - Pradeep Philip retires

தமிழ்நாடு காவல் துறையின் பயிற்சிப்பிரிவு காவல் துறைத் தலைவராக இருந்த பிரதீப் பிலிப் தனது பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

dgp retirement  dgp  பிரதீப் பிலிப்  ஓய்வு பெற்றார் பிரதீப் பிலிப்  பணியிலிருந்து ஓய்வு பெற்றார் பிரதீப் பிலிப்  சைலேந்திரபாபு  பிரிவு உபச்சார விழா  Tamil Nadu Police Training Division  Pradeep Philip retires  Pradeep Philip
பிரதீப் பிலிப்
author img

By

Published : Oct 1, 2021, 3:23 PM IST

சென்னை: பெங்களூருவைப் பூர்விகமாகக் கொண்ட பிரதீப் பிலிப், 1987ஆம் ஆண்டு நேரடியாக இந்திய காவல் பணிக்குத் தேர்வாகி, தமிழ்நாடு காவல் துறையில் தனது பணியைத் தொடங்கினார். 34 ஆண்டுகளாகத் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றிய பிரதீப் பிலிப், ராமநாதபுரம் உள்பட நான்கு மாவட்டங்களில் போதைத் தடுப்புப் பிரிவு, காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

இதையடுத்து பதவி உயர்வு பெற்று காவலர் பயிற்சி மற்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவில் மண்டல காவல் துறைத் தலைவராக (IG) பணியாற்றியுள்ளார். பின்னர் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறைக் கூடுதல் தலைவராகவும் (ADGP) பணியாற்றினார்.

பிரிவு உபச்சார விழா

இதனைத் தொடர்ந்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, குற்றப் புலனாய்வு மற்றும் தமிழ்நாடு காவல் பயிற்சியின் காவல் துறைத் தலைவராக (DGP) பணியாற்றினார். காவல் துறையில், காவலர்கள் நண்பர்கள் குழுவை, தமிழ்நாடு காவல் துறைக்கு அறிமுகப்படுத்தியதில் முக்கியப் பங்கு இவருக்கு உண்டு. இவர் காவலர் நண்பர் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

இவர் 2002ஆம் ஆண்டு லண்டனில் மிக உயரிய விருதான அரசின் விருதைப் பெற்றார். பின்னர் தமிழ்நாடு காவலர் பயிற்சிகளைச் சிறப்பாக நிர்வகித்ததற்கான விருதையும் பெற்றுள்ளார். இத்தகையப் பெருமைக்குரிய இவர் நேற்று (செப். 30) தனது பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

இவருக்கு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு தலைமையில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திறந்தவெளி வாகனத்தில் சென்ற பிரதீப் பிலிப், காவல் துறையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

ஓய்வுபெற்றார் பிரதீப் பிலிப்

பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்த பிரதீப் பிலிப்

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய சைலேந்திரபாபு, “34 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெறும் பிரதீப் பிலிபும், நானும் தேசிய காவல் அகாதமி பல்கலைக்கழகங்களில் இரண்டு ஆண்டுகள் பயிற்சிபெற்று தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் பணியில் சேர்ந்தோம்.

34 ஆண்டுகள் காவல் துறையில் தொடர்ந்து பயணித்துள்ளோம். இவர் வித்தியாசமான காவல் அலுவலர் ஆவார். கடுஞ்சொல் பயன்படுத்தாத காவல் துறை அலுவலர். காவல் துறையினர் மக்களுக்கு நண்பராக இருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர்.

ராமநாதபுரத்தில் மீனவர்களுக்கென ஒரு குழு அமைத்தார். பிற்காலத்தில் மீனவ கிராமங்களில் வில்லேஜ் விஜிலென்ஸ் குழு என அழைக்கப்பட்டது. மீனவர்கள் கடலோர பாதுகாப்புப் படையின் காதுகளும் கண்களும் செயல்படும் வகையில் முக்கியத் திட்டத்தை உருவாக்கி, அடிப்படையாகச் செயல்பட்டவர் இவர்தான்.

குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவும் வகையில் முக்கியத் திட்டத்தை கொண்டுவந்தவரும் இவர்தான். ஸ்குபா டைவிங் போன்ற சாகசப் பயிற்சியை காவல் துறைக்கு அறிமுகப்படுத்தியவர். பிரதீப் பிலிப் காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்திருந்தாலும், காவல் துறை பயிற்சியில் சிறப்பாகப் பங்காற்றினார்.

சிந்தனைப் பயிற்சி என்பதைக் காவல் துறையினருக்குப் பயிற்சி அளிப்பதில் முக்கியமாகப் பங்காற்றியிருக்கிறார். பிலிப்பிசம் என்ற சிறந்த நூலையும் எழுதியுள்ளார். பிரதீப் பிலிப் அனுபவம் கல்விப் பயிற்சி தொடர்ந்து காவல் துறைக்கு அளிக்க வேண்டும்" என்று கூறினார்.

மனித வெடிகுண்டு சம்பவம்

இதையடுத்து பிரதீப் பிலிப் பேசுகையில், “உலகத்தில் பல்வேறு காவல் துறை இருந்தாலும், சிறப்பான காவல் துறை தமிழ்நாடு காவல் துறை. அதில் நீண்ட ஆண்டு காலம் பணிபுரிந்து பெருமைகொள்கிறேன். 34 ஆண்டுகளாகக் காவல் துறையில் பணிபுரிந்துள்ளேன். என் பணிக்காலத்தின் தொடக்கத்தில் மாவட்ட கண்காணிப்பாளராக (SP) இருந்தபோது இரண்டு மோசமான சம்பவங்களை வாழ்க்கையில் சந்தித்தேன்.

காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தபோது, ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட மனித வெடிகுண்டு சம்பவம்; அப்போது நான் காற்றில் வீசப்பட்டேன்.

இந்தியாவின் ஜான் எஃப் கென்னடி ஆன ராஜிவ் காந்தி வெடிகுண்டு விபத்தில் வீசி கிடந்தபோது கெட்டக்கனவு என நினைத்தேன். ஆனால் முகம் முழுவதும் ரத்தமாக இருப்பதைக் கண்டு ஏதோ நிகழ்ந்துள்ளதை உணர்ந்தேன். என் முகம் உடல் முழுவதும் ரத்தமாக இருந்தது. அந்த வெடிகுண்டு விபத்தில் சிக்கிய பிறகு ரத்த வெள்ளத்தில் இருந்த நான் பயங்கர தாகத்தில் இருந்தேன்.

அந்நேரத்தில் பொதுமக்களில் ஒருவர் எனக்குத் தண்ணீர் கொடுத்தார். இன்றுகூட அவரது முகம் எனது நினைவில் உள்ளது. அவர் கடவுள் அனுப்பிய தேவதை என்று நான் நினைக்கிறேன். அவர் பெயர் புருஷோத்தமன். அந்தச் சம்பவம்தான் எனது நம்பிக்கையின் வேராக இருந்தது. பாறை போன்று அந்த நம்பிக்கை ராக்கெட்டை போன்று அடுத்தடுத்து மேலே செல்வதற்கு உந்துதலாக இருந்தது.

சூப்பர் மனிதன் சைலேந்திரபாபு

ஒவ்வொரு காவலரும் ராக்கெட் போன்று அடுத்தடுத்த படிநிலைக்குச் செல்ல வேண்டும். சமுதாயத்திற்குப் பெரிய அளவில் பங்களிப்பை அளிக்க வேண்டும். உடலை உறுதியாக வைத்துக்கொள்ளும் விவகாரத்தில், நமது தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு ஒரு சிறந்த மனிதன்.

ஒவ்வொரு வார இறுதி நாள்களிலும் 100 கிலோமீட்டர் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வார். தமிழ்நாடு காவல் துறையின் தலைவராகப் பதவியேற்ற பிறகு தனது உடல் உறுதியை தொடர்ந்து கடைப்பிடித்துவருகிறார்.

மனிதநேயமிக்க சைலேந்திரபாபு காவல் துறையின் தலைவராக இருப்பது பெருமை. நான் காவல் துறையில் பணியாற்றியவிதத்தை நீங்கள் தெரிவித்தீர்கள். நீங்கள் எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் ஆற்றிய பணி சிறந்தது. தமிழ்நாடு காவல் துறைக்கு எதிர்காலத்தில் சிறந்த நாள்கள் உள்ளன.

நாட்டின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் தியாகம் செய்து வேலைபார்ப்பவர்கள் காவல் துறையினர். தமிழ்நாடு அரசும் காவல் துறைக்குச் சிறந்த வகையில் ஆதரவு அளித்தனர். நான் தொடங்கிய “பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” தொடர்ந்து மக்களுக்குச் சேவையாற்றுவார்கள். கடந்த 18 மாதங்களில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு அளிப்பதில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பங்கு முக்கியமாக உள்ளது. எனக்கு கொடுத்த கடைசி அணிவகுப்பு என் ஞாபகத்தில் என்றும் இருக்கும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: அக். 8இல் ராமோஜி ஃபிலிம் சிட்டி திறப்பு: இது உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.