சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக அமைச்சரவையில் மூன்று முறை மாற்றங்கள் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி காட்டியுள்ளார்.
இந்த நிலையில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியுள்ளார். மேலும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பி. ராஜா, இன்று காலை 10.30 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் உள்ள தர்பார் அரங்கில் நடைபெறும் விழாவில் அமைச்சராக பதவிப்பிரமாணம் ஏற்கிறார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வருக்கிறார். இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துக்கொள்கின்றனர். பதவியேற்புக்கு பிறகே டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஒதுக்கப்படும் இலாக்கா குறித்த விபரங்கள் தெரியவரும்.
இதையும் படிங்க: மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு..! அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..