ETV Bharat / state

Pongal Bonus: ஆவின் பணியாளர்களுக்கு ரூ.2.70 கோடி பொங்கல் போனஸ்!

ஆவின் நிறுவனத்தில் பணியாற்றும் 27 ஆயிரத்து 189 பணியாளர்களுக்கு 2 கோடியே 70 லட்ச ரூபாய் செலவில் பொங்கல் பண்டிகை ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் சா.மு.நாசர்
அமைச்சர் சா.மு.நாசர்
author img

By

Published : Jan 13, 2023, 4:47 PM IST

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. அதேபோல் ஆவின் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொங்கல் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் ஆயிரத்து 325 பணியாளர்களுக்கு 12 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயும், மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் 2 ஆயிரத்து 969 பணியாளர்களுக்கு 28 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 22 ஆயிரத்து 895 பணியாளர்களுக்கு 2 கோடியே 28 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 27 ஆயிரத்து 189 பணியாளர்களுக்கு 2 கோடியே 70 லட்ச ரூபாய் பொங்கல் பண்டிகை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆவின் பணியாளர்கள் 30 பேருக்கு ஊக்கத் தொகை வழங்கி பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சா.மு.நாசர் கூறுகையில், "ஆவினில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பொருட்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று உள்ளன. விற்பனை நோக்கோடு இல்லாமல் 280 பால் பொருட்கள் ஆவினில் சுத்தமாக தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

ஏரி, குளங்கள் நிரம்பி வயலில் நீர் தேங்கியதால், கால்நடை மேய்ச்சல் குறைந்துள்ளது. இதனால் பால் வரத்து குறைந்துள்ளது. இந்த சீசனில் எப்போதும் குறைவாகத்தான் இருக்கும். பால் வரத்து குறைந்துள்ளதால், ஆவின் பால் சப்ளை குறைந்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி நெய் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், கோடை காலத்தை முன்னிட்டு ஆவினில் புதிய வகை குளிர்பானம் அறிமுகம் செய்யப்படும். மேலும், ஐஸ்கிரீம் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.

மேலும், 'கடந்த ஆட்சியில் முறையான நியமனமின்றி சொந்தக்காரர்களை நேரடியாக நியமனம் செய்த 236 பேர்களில் 204 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குழு அமைத்து ஆய்வறிக்கையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து 25 பேர் உயர் நீதிமன்றம் சென்றனர்; அதில் பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதை மீண்டும் அப்பீல் செய்வோம்' என்று கூறினார்.

சினிமா திரையரங்குகளில் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது அவர்களது உரிமை எனவும்; அதில் தலையிட முடியாது என்றும் பால் கொள்முதல் லாரி 168 வாகனங்களுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இப்படியும் சைபர் கொள்ளைகளா..? - ரொம்ப கவனமாக இருங்க நண்பா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.