ETV Bharat / state

தமிழ்நாட்டில் உள்ள டாடா நிறுவனத்துக்கு வடமாநிலத்தில் இருந்து பணியாளர்கள் - வேல்முருகன் கண்டனம் - மண்ணின் மக்களுக்கே முன்னுரிமை

தமிழ்நாட்டில் உள்ள டாடா நிறுவனத்துக்கு வடமாநிலத்தில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த இளம் பெண்களுக்கு பணி வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள்

author img

By

Published : Oct 12, 2022, 4:21 PM IST

Updated : Oct 12, 2022, 4:32 PM IST

இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிருஷ்ணகிரி மாவட்டம் கூத்தனப்பாலை டாடா எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலைக்காக தனி தொடர் வண்டியில் ஜார்க்கண்ட்டிலிருந்து 860 பெண் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டுப் பெண்களை வேலையில் அமர்த்துவதை தவிர்ப்பதற்காகவே வெறும் 12ஆம் வகுப்புப் படித்த பெண்கள் மட்டுமே தங்களுக்கு வேண்டுமென டாடா நிறுவனத்தினர் வடமாநில பெண்களை பணி அமர்த்தியுள்ளனர். டாடா வெளிப்படையாகவே, 18 வயதிலிருந்து 21 வயது வரை உள்ள இளம்பெண்களே வேண்டும் என்றும், 12ஆம் வகுப்பிற்கு மேல் படித்திருக்கக் கூடாது என்றும் நிறுவனத்தினர் வேலைக்கு வடமாநில பெண்களை நியமித்திருப்பது சட்டப்படி தவறானதாகும்.

தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் படித்துவிட்டு உரியப் படிப்புக்கேற்ற வேலையின்றி தவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலேயே செயல்படும் டாடா தனியார் நிறுவனம், தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு வெளி மாநிலங்களிலிருந்து வேலைக்கு இளம் பெண்களை சிறப்புத் தொடர்வண்டி வழியே அழைத்து வந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

சட்டவிரோத அறிவிப்பின் வழியே வடமாநிலப் பெண்களை பணியமர்த்திய டாடா நிறுவனத்தின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது. எனவே, தனது நிறுவனத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த இளம் பெண்களுக்கு பணி வழங்க, டாடா நிர்வாகம் முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு, மண்ணின் மக்களுக்கே முன்னுரிமை வழங்க, அந்நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்த வேண்டும். இதற்காக, அரசு தரப்பில் இருந்து, தனியார் நிறுவனங்களை கண்காணிக்க, தனி குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சி.வி. சண்முகத்திற்கு கொலைமிரட்டல் - நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஆணையரிடம் புகார்

Last Updated : Oct 12, 2022, 4:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.