ETV Bharat / state

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 18 அல்லது 19ஆம் தேதி கூட உள்ளதாக தகவல்! - சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் தேதி அறிவிப்பு

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வருகின்ற 18 அல்லது 19ஆம் தேதி கூட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்குகிறது.

சென்னை
சென்னை
author img

By

Published : Jan 16, 2021, 5:59 PM IST

ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அப்போது அரசு திட்டங்கள் மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆளுநர் தனது உரையில் குறிப்பிடுவார். மேலும் அரசு நிறைவேற்ற இருக்கும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பையும் ஆளுநர் வெளியிடுவார். அதன்படி, ஜனவரி மாத கூட்டத்தொடர் தொடங்குவதற்கான நாளை குறிப்பிட்டு அதற்கான கோப்பு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வருகின்ற 18 அல்லது 19 அன்று சட்டப்பேரவை கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வேளாண் மசோதாவிற்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்தும், முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என தெரிகிறது.

கரோனா காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் கடந்த முறை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டப்பட்டது. தற்போது கரோனா தொற்று குறைவாக இருப்பது காரணமாக தலைமை செயலகத்திலேயே சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்குச் செலவுத்தொகையாக 621 கோடி ரூபாய் ஆகலாம் - சத்ய பிரதா சாகு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.