ETV Bharat / state

அமலுக்கு வந்த பத்திரப் பதிவுத்துறை சேவை கட்டணம் உயர்வு.. இவ்வளவு கட்டணமா? - TN registration department hikes fee

தமிழ்நாடு பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்வு இன்று (ஜூலை 10) முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில் இவ்வளவு கட்டண உயர்வா என மக்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 10, 2023, 9:36 PM IST

சென்னை: தமிழ்நாடு பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்திய தமிழ்நாடு அரசு அறிவிப்புகள் இன்று (ஜூலை 10) முதல் அமலுக்கு வந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் முத்திரைத் தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன்வடிவை கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து, நேற்று முன் தினம் (ஜூலை 8) பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்திய தமிழ்நாடு அரசு அறிவிப்புகள் வெளியானது. அதன் அடிப்படையில் பத்திரபதிவுத்துறை சேவை கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டது. 20 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்படாமல் இருந்த பத்திரபதிவுத்துறை சேவை கட்டணத்தை உயர்த்தியதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவணப்பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொறுத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரை கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ரசீது ஆவணத்திற்கு பதிவு குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச முத்திரை தீர்வை 25ஆயிரம் ரூபாயில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் எனவும், தனி மனை பதிவிற்கான கட்டணம் 200 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் 10 ஆயிரம் ரூபாய் என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு விழுக்காடு எனவும் மாற்றியமைப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

பதிவுச் சட்டம், 1908-ன் பிரிவு 78-ல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும் சில கட்டணம் 20 ரூபாயில் இருந்து 200 ரூபாய் எனவும், குடும்ப அதிகபட்ச பதிவு கட்டணம் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் எனவும், தனி மனை பதிவிற்கான கட்டணம் 200 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் 10 ஆயிரம் ரூபாய் என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு விழுக்காடு எனவும் மாற்றியமைப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

பொது அதிகார ஆவண கட்டணம் ரூ.10,000லிருந்து சொத்தின் சந்தை மதிப்பில் 1% ஆக உயர்கிறது. ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.200 ஆக உயர்வு அதிகபட்ச முத்திரை தீர்வை கட்டணம் ரூ.25,000-ல் இருந்து ரூ.40,000ஆக உயர்கிறது. தனிமனை பதிவிற்கான கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.1,000ஆக உயர்கிறது செட்டில்மெண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000லிருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் விசாரிக்கப்படும் கச்சத்தீவு வழக்கு - மீனவர்கள் கைதை அடுத்து நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.