இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஈதுல் பித்ர் என்னும் மகிழ்ச்சிகரமான ஈகைத் திருநாளில் அனைத்து இஸ்லாமிய சகோதர. சகோதரிகளுக்கும் எனது ரமலான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஈதுல் பித்ர் என்னும் ஈகைத் திருநாள் ரமலான் மாதத்தின் மேன்மையை உணர்த்துவதுவாக அமைந்துள்ளது. இந்தத் திருநாளானது உண்மையான இறை வழிபாடு, தான தர்மங்கள் செய்தல், சகோதரத்துவத்தைப் பேணுதல் ஆகிய நல்லியல்புகளை கொண்டாடுவதாக அமைந்துள்ளது.
மேலும், இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வே ஒருவருக்கொருவர் அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்வதே ஆகும். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாம் அனைவரும் நட்பு, சகோதரத்துவம், பரஸ்பர மரியாதை, இரக்கம், அன்பு, தாரளமாக உதவும் மனப்பான்மையை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும்.
எனவே இந்த ஈகைத் திருநாளில் புனிதம், உன்னதமான கொள்கைகளை நமது வாழ்க்கையில் ஏற்படுத்திக்கொள்ளவும், அனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்திட வேண்டும் எனவும் வாழ்த்துகின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மே 25 ரமலான் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு