சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஷ்ய ராணுவம் இன்று (பிப் 24) அதிகாலை உக்ரைன் நாட்டுக்குள் ராணுவ நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளதாக ஊடகச் செய்திகளின் வாயிலாக அறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 5ஆயிரம் மாணவர்கள், பெரும்பாலும் தொழில்முறை கல்வி படிப்போர் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் இருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வாயிலாக பல மீட்பு அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இதனை ஒருங்கிணைக்கும் பொருட்டு ஜெசிந்தா லாசரஸ் மாநிலத் தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்பு அலுவலரகம் நியமனம்
ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களையும், டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர், உள்ளுறை ஆணையரத் தொடர்பு அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள், புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்கு அருகிலுள்ள தொடர்பு அலுவலர்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் விவரத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்பு அலுவலர்களின் எண்கள்
மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070, தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம் 9445869848, 9600023645, 9940256444, 044-28515288, வாட்ஸ்அப் எண் 9289516716 மின்னஞ்சல் – ukrainetamils@gmail.com’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உக்ரைன் விவகாரம்... தமிழர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்...