தமிழ்நாட்டில் வரும் 31ஆம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், பத்திரப்பதிவு அலுவலகங்கள் முழுமையாகச் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா பாதித்துள்ள நிலையில் பத்திரப்பதிவு செய்யும்போது வழங்கப்பட வேண்டிய வாழ்வுச் சான்றிதழை நேரில் வந்து வழங்குவதால் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி வரும் ஜூலை 31ஆம் தேதிவரை வாழ்வுச் சான்றிதழை மின்னஞ்சல் மூலமாகவே வழங்கலாம் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:செங்கல்பட்டு, பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர் உட்பட இருவர் கைது!