துப்புரவுப் பணியாளர்களை 'தூய்மைப் பணியாளர்கள்' ( Cleanliness Workers ) என அழைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணையில், "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களை “தூய்மைப் பணியாளர்கள்” ( Cleanliness Workers ) என அழைப்பது என்று அறிவித்திருந்தார்.
துப்புரவுப் பணியாளர்கள் பொது இடங்களில் தூய்மையை பேணிக் காப்பது, புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, தெருக்களில் சேரும் குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
இப்பணியாளர்களின் செயல்பாடுகளை கௌரவிக்கும் வகையிலும், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடவும் அனைத்துப் துப்புரவுப் பணியாளர்களும் இனி “தூய்மைப் பணியாளர்கள்" ( Cleanliness Workers ) என்று அழைக்கப்படுவார்கள்" என்று அதில் குறப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தாய் இறுதி சடங்கு முடித்த கையோடு பணி - தூய்மைப் பணியாளருக்கு எம்.எல்.ஏ பாராட்டு