தமிழ்நாட்டில் கரோனா, ஒமைக்ரான் தொற்று பாதிப்பு தீவிரமாகப் பரவிவருகிறது. இதனையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாகத் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படும் எனவும் உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மூலம் டெலிவரி செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உணவகங்கள், சிற்றுண்டி விடுதிகள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு தனியார் மின்னணு வர்த்தக விநியோக முறையில் மட்டுமின்றி, தங்களுடைய சொந்த விநியோக முறையின் (Own Delivery) மூலமாக உணவுப் பொருள்களை விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு உணவகம் மூலமாக நேரடியாக உணவு வழங்கப்படுவதற்கு காவல் துறையினர் ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு நாளன்று திருமணத்திற்குச் செல்பவர்களுக்கு அனுமதி