ETV Bharat / state

மேயர், துணை மேயர் உள்ளிட்டோருக்கு மதிப்பூதியம் அறிவிப்பு.. யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா? - மேயர்

தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 13, 2023, 8:09 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள், தாங்கள் முழுநேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால், தங்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து இக்கோரிக்கை குறித்துப் பரிசீலித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், துணை மேயர் மற்றும் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மேலும், பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர் உள்ளிட்டோருக்கு மதிப்பூதியம் வழங்க ஆணையிட்டுள்ளார்.

இதையும் படிங்க: MK Stalin:அரசு அலுவலகங்களில் மக்களை அலைக்கழிக்காதீர்கள் - முதலமைச்சர் அட்வைஸ்!

மக்கள் நலப் பணிகளைச் சிறப்பிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில் இந்த மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அறிவிக்கப்பட்டுள்ள மதிப்பூதிய விவரம்

  • மாநகராட்சி மேயர்: 30,000
  • துணை மேயர் : 15,000
  • மாநகராட்சி மன்ற உறுப்பினர்: 10,000
  • நகராட்சி மன்றத் தலைவர்: 15,000
  • துணைத் தலைவர்: 10,000
  • நகர் மன்ற உறுப்பினர்: 5,000
  • பேரூராட்சி தலைவர்: 10,000
  • பேரூராட்சி துணைத் தலைவர்: 5,000
  • பேரூராட்சி மன்ற உறுப்பினர்: 2,500

இந்த மதிப்பூதியம், ஜூலை மாதம் தேதியிட்டு வழங்கப்படும் எனவும் இந்நடவடிக்கை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத் திறனை வலுப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈடிவி பாரத்திற்கு கருத்து தெரிவித்துள்ள சென்னை பெருநகர மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன், "இந்த ஊதியம் ஊழியர்களுக்கு ஒரு வாழ்வாதாரமாக அமையும் எனவும் ஊழியர்கள் வேலை செய்வதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள்" எனவும் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பால் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில் அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பாதாள சாக்கடைகளை சுத்தப்படுத்த மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என்றுகூறியுள்ளோம்: கோர்டில் அரசு தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.