ETV Bharat / state

விவசாயிகளுக்கு வெளிநாடுகளில் பயிற்சி ; பள்ளி மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலா! - வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

தமிழக வேளாண் பட்ஜெட்டில், தமிழக விவசாயிகளுக்கு வெளிநாடுகளில் பயிற்சி, பள்ளி மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலா ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 150 முன்னோடி விவசாயிகள் இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamil
tamil
author img

By

Published : Mar 21, 2023, 3:19 PM IST

சென்னை: 2023-24ஆம் ஆண்டிற்கான தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று(மார்ச்.21) தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

அதில், தமிழ்நாடு விவசாயிகளுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிக்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலாத் திட்டம் ஆகியவற்றை அறிவித்தார்.

அவர் பேசும்போது, "சில வெளிநாடுகளில் விவசாயத்தில் உயர் ரகத் தொழில்நுட்ப பயன்படுத்தப்பட்டு உற்பத்தி திறன் அண்ணாந்து பார்க்கும் நிலையில் இருக்கின்றது. அங்கிருக்கும் தொழில்நுட்பங்களை நமது விவசாயிகள் விவசாயிகள் அறிந்து கொள்வதால், நாமும் அப்படி உற்பத்தி செய்ய முடியாதா? என்ற எண்ணம் ஏற்படும், அது சாகுபடி சார்ந்த தேடலை உண்டாக்கும்.

எனவே, 150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென மத்திய, மாநில அரசின் நிதியில் இருந்து மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

அப்போது, குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ஏராளமான சட்டமன்ற உறுப்பினர்கள் விவசாயம் செய்து வருவதாகவும், அவர்களையும் வெளிநாடு கூட்டிச்செல்ல வேண்டும் என்றும் நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலா குறித்து பேசிய அமைச்சர், "பாடப் புத்தகங்களிலும், ஊடகங்களிலும் கண்ட வயல்களையும், தோட்டங்களையும் மாணவர்கள் நேரடியாக காண வேண்டும் என்பதற்காகவும், வேளாண்மையின் மகத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படும்.

உழவர்களின் அருமையையும், உணவின் அருமையையும் உணரும் மெய்ஞானமாக இந்தப் பண்ணைச் சுற்றுலா அமையும். அரிசியும் பருப்பும் தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தியாவதாக நினைத்துக் கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்திற்கு இந்த சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும். ஒரு கோடி ரூபாய் நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: "ரூ.82 கோடி மதிப்பீட்டில் சிறு தானிய இயக்கம்" - வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.