சென்னை: மகாகவி பாரதியாரின் 141ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பாரதியின் வாழ்க்கை வரலாறு நாடகம் நடைபெற்றது. சென்னை முகப்பேரைச் சார்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 141 பேர் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை நடித்துக் காட்டினர். விழாவில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடகத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மகாகவி நாடகத்தை பார்த்து கண் கலங்காமல் இருந்தால் இந்தியராக, தமிழராக இருக்க முடியாது என்றும், மாணவர்களின் நாடகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், நாடகத்தை இயக்கிய பாரதி பாலா எனது தொகுதிக்காரர் என்பதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.
வாரணாசியில் பாரதி வாழ்ந்த இல்லத்தை தமிழக அரசின் சார்பில் புதுப்பித்து முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்ததாகவும், அவர் வெளியிட்ட பாரதியாரின் நூலை தான் பெற்றுக் கொண்டது பெருமை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
37 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் முதல் முறையாக ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றதாகவும், வரும் காலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த அரங்கில் நடைபெற்றாலும், இதுபோன்ற நாடக நிகழ்வு நடைபெறுமா என்பது தெரியவில்லை என அமைச்சர் கூறினார்.
பாரதியாரின் வேடத்திலும், செல்லம்மாவின் வேடத்திலும் நடித்த குழந்தைகள் சிறப்பாக நடித்ததாகவும், நாடகத்தில் பங்கேற்ற 141 குழந்தைகளும், இயக்குனரின் வசனங்களையும், நடிப்பையும் கேட்டு சிறப்பாக நடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக அரசு பாரதியாரின் பெருமைகளை பாராட்டக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய இந்த நாடகம், மாணவர்களை அரசு பள்ளிக்கு வர அழைப்பது போல் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மகாகவி பாரதியாரின் திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் நிறைவேற்றுவார் என தான் கூறியதாகவும் அது தற்போது நடந்து வருவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
-
மகாகவி பாரதியாரின் 141-வது பிறந்தநாளான இன்று, அவரின் வாழ்க்கையை 141 மாணவர்கள் தங்களின் திறமையால் வரலாற்று நாடகமாக வாழ்ந்து காட்டினார்கள்
— Anbil Mahesh (@Anbil_Mahesh) December 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
சென்னை முகப்பேர் அரசு தொடக்கப்பள்ளியைச் சார்ந்த இந்த 141 அக்கினிக் குஞ்சுகளின் கனவு மெய்ப்படட்டும்! @tnschoolsedu pic.twitter.com/spbM9ZajxJ
">மகாகவி பாரதியாரின் 141-வது பிறந்தநாளான இன்று, அவரின் வாழ்க்கையை 141 மாணவர்கள் தங்களின் திறமையால் வரலாற்று நாடகமாக வாழ்ந்து காட்டினார்கள்
— Anbil Mahesh (@Anbil_Mahesh) December 11, 2022
சென்னை முகப்பேர் அரசு தொடக்கப்பள்ளியைச் சார்ந்த இந்த 141 அக்கினிக் குஞ்சுகளின் கனவு மெய்ப்படட்டும்! @tnschoolsedu pic.twitter.com/spbM9ZajxJமகாகவி பாரதியாரின் 141-வது பிறந்தநாளான இன்று, அவரின் வாழ்க்கையை 141 மாணவர்கள் தங்களின் திறமையால் வரலாற்று நாடகமாக வாழ்ந்து காட்டினார்கள்
— Anbil Mahesh (@Anbil_Mahesh) December 11, 2022
சென்னை முகப்பேர் அரசு தொடக்கப்பள்ளியைச் சார்ந்த இந்த 141 அக்கினிக் குஞ்சுகளின் கனவு மெய்ப்படட்டும்! @tnschoolsedu pic.twitter.com/spbM9ZajxJ
இதையும் படிங்க: தமிழும் சமஸ்கிருதமும் ஐரோப்பிய மொழிகளை விட பழமையானது - ஆளுநர் ஆர்.என். ரவி