சென்னை: சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 24) நிதிநிலை அறிக்கை மீதான பதிலுரையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "தமிழ்நாட்டில் வளம், வளர்ச்சி, பொருளாதாரம் என அனைத்தும் இருப்பதால் பணக்கார மாநிலமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் 75 விழுக்காடு மக்கள் சொந்த வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
16 விழுக்காடு மக்கள் மட்டுமே அரசால் வழங்கும் வீடுகளில் வசிக்கின்றனர். 66 விழுக்காடு பேர் இருசக்கர வாகனங்கள் வைத்துள்ளனர். 50 விழுக்காடு வீடுகளில் குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளன. ஆகவே, தமிழ்நாடு வளர்ந்த மாநிலத்திற்கான எடுத்துக்காட்டு. தமிழ்நாடு வளர்ந்த பணக்கார மாநிலம். ஏழை மாநிலம் இல்லை. ஆகவே, தமிழ்நாட்டை பிகார், உத்தரப்பிரதேசத்துடன் ஒப்பிடக்கூடாது" என்றார்.
இதையும் படிங்க: இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாடு விடிவுதரும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்