சென்னை அருகே உள்ள பூவிருந்தவல்லியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய பெண்கள் உள்பட 500க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கும், அதிமுக அரசுக்கும் எதிராகக் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
மேலும், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி பேசி வருவதை திரும்பப்பெற வேண்டும். இதற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவிற்கு நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலிலும் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இஸ்லாமியர்கள் வாக்களிக்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
இதையும் படிங்க: வங்கி நகை மதிப்பீட்டாளர் தற்கொலை முயற்சி: புகாரிலோ 35... மோசடியோ 50...!