ETV Bharat / state

Murali vijay : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முரளி விஜய் ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தமிழக கிரிக்கெட் வீரர் முரளி விஜய் (Murali vijay) தெரிவித்துள்ளார். தனது கிரிக்கெட் பயணத்தில் உறுதுணையாக இருந்த பிசிசிஐ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

முரளி விஜய்
முரளி விஜய்
author img

By

Published : Jan 30, 2023, 5:19 PM IST

சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய வீரர் முரளி விஜய் (Murali vijay) அறிவித்துள்ளார். தமிழக வீரரான முரளி விஜய் கடந்த 2002-ம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகமானார். வலது கை பேட்ஸ்மேனான முரளி விஜய் இந்திய அணிக்காக 61 டெஸ்ட், 17 ஒரு நாள், 9 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள முரளி விஜய் 12 சதம், 15 அரை சதம் உள்பட 3 ஆயிரத்து 982 ரன்கள் அடித்துள்ளார். 17 ஒருநாள் போட்டிகளில் 339 ரன்கள் அடித்துள்ள விஜய் ஒரு அரைசதமும் அடித்துள்ளார். மேலும் 9 டி20 போட்டிகளில் 169 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வந்த முரளி விஜய் கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆயிரம் பந்துகளை அசால்ட்டாக நின்று விளையாடி ராகுல் டிராவிட்டை நினைவு கூர்ந்தார்.

கடைசியாக 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கிய முரளி விஜய் அதன்பின் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெறுவதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தன் சமூக வலைதளப் பக்கத்தில் முரளி விஜய் பதிவிட்டுள்ளதாவது, "சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலிருந்தும் ஓய்வு பெறுகிறேன் என்பதை இந்த நாளில் மிகுந்த பணிவுடனும், நன்றியுடனும் அறிவிக்கிறேன்.

2002 முதல் 2018 வரை வரையிலான ஆண்டுகள் என் வாழ்வில் சிறப்பாய் அமைந்தன. குறிப்பாக இந்திய அணிக்காக விளையாடியதை மிகப்பெரும் கவுரவமாக நான் கருதுகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு தந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடைய சக அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள், அணி உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களுடைய ஆதரவு இல்லாமல், என்னுடைய கிரிக்கெட் பயணம் சிறப்பு பெற்றிருக்காது. கிரிக்கெட் ரசிகர்கள் எனக்கு அளித்த ஆதரவையும் ஊக்கத்தையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முரளி விஜய் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் என்னுடைய உயர்வு மற்றும் தாழ்வின்போது உறுதுணையாக ரசிகர்கள் இருந்தனர். அவர்களுடனான என்னுடைய பயணத்தை என்றைக்கும் மறக்க முடியாது. கடைசியாக எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எனக்கு நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் தந்தனர். அவர்கள் எனக்கு முதுகெலும்பை போல் ஆதரவாக இருந்தனர்.

கிரிக்கெட் உலகில் இருக்கும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள ஆவலாக உள்ளேன். புதிய சூழல்களில் என்னுடைய புதிய சவால்களை எதிர்கொள்ள ஆவலாக இருக்கிறேன். கிரிக்கெட் பயிற்சியாளராக என்னுடைய புதிய பயணம் தொடங்க உள்ளது. என் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை நோக்கி நகர்கிறேன்.

என்னுடைய முன்னாள் அணி வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் கொடுத்த நினைவுகள் அனைத்துக்கும் நன்றி’ இவ்வாறு முரளி விஜய் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: புதிய வசதிகளுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தயார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.