தமிழ்நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் ஒரே நாளில் 35,873 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று (மே.22) 36,184 பேருக்கு கரோனா உறுதியான நிலையில் இன்று 35,873 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மேலும் 5,559 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் மேலும் 448 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 20,046 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் மட்டும் மேலும் 86 பேர் உயிரிழந்தனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்குட்பட்ட 100 பேர் உயிரிழந்தனர். கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 125 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 279 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 169 பேரும் உயிரிழந்தனர்.
கரோனாவில் இருந்து மேலும் 25,776 பேர் குணமடைந்த நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15,02,537ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2,84,276 ஆக அதிகரித்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் குறைந்துள்ள கரோனா பரவல் விகிதம்!