சென்னை: மக்கள் நல்வாழ்வு துறை இன்று (ஆக. 3) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 903 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த ஆயிரத்து 905 நபர்களுக்கும், மலேசியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த மூன்று நபர்களுக்கும் என 1,908 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆர்டிபிசிஆர் பரிசோதனை
தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 70 லட்சத்து 20 ஆயிரத்து 338 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் 25 லட்சத்து 65 ஆயிரத்து 452 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு ஆளானார்கள் என்பது தெரியவந்தது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 20 ஆயிரத்து 217 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்து 2,047 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 11 ஆயிரத்து 76 என உயர்ந்துள்ளது.
இறந்தவர்கள் எண்ணிக்கை
மேலும் தனியார் மருத்துவமனையில் 6 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 23 நோயாளிகளும் என 29 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்து 159 என உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் புதிதாக 203 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 208 நபர்களுக்கும், ஈரோட்டில் 181 நபர்களுக்கும், தஞ்சாவூரில் 118 நபர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரிசோதனை செய்பவர்களில் புதிதாக பாதித்தவர்கள் எண்ணிக்கை 0.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கோயம்புத்தூரில் 2.1 விழுக்காடு, அரியலூரில் 2.1 விழுக்காடு, தஞ்சாவூரில் 3.5 விழுக்காடு என அதிகரித்துள்ளது.
மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:
சென்னை - 5,38,727
கோயம்புத்தூர் - 2,30,012
செங்கல்பட்டு - 1,62,336
திருவள்ளூர் - 1,13,707
சேலம் - 93,643
திருப்பூர் - 88,072
ஈரோடு - 94,217
மதுரை - 73,562
காஞ்சிபுரம் - 71,839
திருச்சிராப்பள்ளி - 72,635
தஞ்சாவூர் - 68,218
கன்னியாகுமரி - 60,176
கடலூர் - 60,652
தூத்துக்குடி - 55,139
திருநெல்வேலி - 47,958
திருவண்ணாமலை - 52,175
வேலூர் - 48,136
விருதுநகர் - 45,541
தேனி - 42,962
விழுப்புரம் - 43,933
நாமக்கல் - 47,365
ராணிப்பேட்டை - 42,013
கிருஷ்ணகிரி - 41,446
திருவாரூர் - 37,952
திண்டுக்கல் - 32,235
புதுக்கோட்டை - 28,210
திருப்பத்தூர் - 28,310
தென்காசி - 26,876
நீலகிரி - 30,657
கள்ளக்குறிச்சி - 29,199
தருமபுரி - 26,188
கரூர் - 22,691
மயிலாடுதுறை - 21,166
ராமநாதபுரம் - 20,058
நாகப்பட்டினம் - 18,769
சிவகங்கை - 18,862
அரியலூர் - 15,834
பெரம்பலூர் - 11,507
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,018
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் -1,078
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: பிரதமரைச் சந்திக்க ஒரு அரிய வாய்ப்பு: தீவிரப் பரப்புரையில் டெல்லி பாஜக