காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவு குறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கிருஷ்ணன் தன் தாயின் வார்த்தையைக் காப்பாற்றினார், புத்தர் தன் துறவறத்திலிருந்து திரும்பாமல் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். இதுதான் இந்தியக் கலாசாரம். அப்படிப்பட்ட தேசத்தில் காஷ்மீர் மக்களுக்குக் கொடுத்த வாக்கை பாஜக மீறியுள்ளது.
காஷ்மீர் நிலைமை வேறு எந்த மாநிலத்திற்கும் வராது என்பதில் நிச்சயம் இல்லை. நேரு அப்போது நல்ல முடிவு எடுத்திருக்காவிட்டால் காஷ்மீர் எப்போதோ பாகிஸ்தானுடன் சென்றிருக்கும். இந்திய வரலாற்றை மாற்ற ஹிட்லர், முசோலினி போல் மோடி முடிவெடுக்கிறார்" என்றார்.
மேலும் அவர், வைகோவின் குற்றச்சாட்டு குறித்துப் பேசுகையில், "வைகோ காங்கிரஸ் தவறு இழைத்தது என்றார் ஆனால் என்ன தவறு என்று சொல்லவில்லை. இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசாவிட்டாலும் மற்ற தலைவர்கள் தொடர்ந்து பேசிவருகின்றனர். அமித் ஷா காஷ்மீருக்காக உயிரை விடத் தேவையில்லை. அவர் உயிர் யாருக்கும் பயன்படாது" என்று பேசினார்.