நூறாண்டு கனவுத் திட்டம்
- கடந்த நான்காண்டுகளில் 50 ஆண்டுகால காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு,
- உழவர்களின் துயர் துடைக்க பயிர்க்கடன் தள்ளுபடி,
- காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு ஆறுகள் இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது,
மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு
- காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது,
- நீர்நிலைகளைப் பாதுகாக்க குடிமராமத்துத் திட்டம்,
- நிர்வாக வசதிக்காக ஆறு புதிய மாவட்டங்களை உருவாக்கியது,
- 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள்,
- அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம் பயில 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு,
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது
- 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் மூன்று லட்சத்து 500 கோடி ரூபாய் - வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் மூலம் எட்டாயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்தது,
- கரோனா பெருந்தொற்று காலத்திலும் சிறப்பான செயல்பாடுகளினால் 101 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 88 ஆயிரத்து 727 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்தது,
பொங்கல் பரிசுத் திட்டம்
- பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கம்,
- உழவர்களின் நலனுக்காக காவிரி, அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க 'நடந்தாய் வாழி காவிரி திட்டம்',
- சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா,
- மகளிர் பாதுகாப்பிற்காக 'காவலன் செயலி',
- அம்மா மினி கிளினிக்,
- 7 புதிய சட்டக் கல்லூரிகள்,
- தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 வெளியிட்டது,
- இணைய வழி வகுப்புகளில் கல்வி கற்க கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா 2GB தரவு அட்டைகள்
என எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளின் மூலம் தொடர்ந்து செயல்படுத்திவருகிறது.
தமிழ்நாடு அரசு பெற்ற விருதுகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு மேற்கொண்ட எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசின் நல் ஆளுமைத் திறனுக்கான தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம் பெற்றது. மேலும் பெற்ற விருதுகளாவன:
- தொடர்ந்து ஐந்து முறை கிருஷி கர்மான் விருது,
- டிஜிட்டல் இந்தியா 2020 தங்க விருது,
- உடல் உறுப்பு தானத்தில் ஆறு முறை தேசிய விருது, ஊரக வளர்ச்சித் துறையின் சிறப்பான செயல்பாட்டிற்காக பல்வேறு விருதுகள், இணைய வழி கற்றலில் முன்னோடி மாநிலத்திற்கான தேசிய விருது,
- மூத்த குடிமக்கள் சேவைக்காக தேசிய விருது
எனப் பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் தமிழ்நாடு அரசு பெற்று தொடர்ந்து முன்னேறிவருகிறது.
புத்தகம் வெளியீடு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட 'நாடு போற்றும் நான்காண்டு சாதனைகள்' என்ற நான்காண்டு சாதனை மலர்கள் (தமிழ், ஆங்கிலம்), சட்டப் பேரவையில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் நேற்று (பிப். 23) முதலமைச்சர் வெளியிட, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.
முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு 1 & 2 முதலமைச்சர் வெளியிட, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் கே. ராஜு பெற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம்: தமிழ்நாடு நிதித்துறைச் செயலர் கிருஷ்ணன்