ETV Bharat / state

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதலமைச்சர்! - முதலமைச்சர் பழனிசாமிக்கு கரோனா தடுப்பூசி

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி இன்று (மார்ச்.11) கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

covid vaccine cm
முதலமைச்சர் பழனிசாமி
author img

By

Published : Mar 11, 2021, 1:19 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி போடும் முகாம் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இரண்டாம் கட்டமாக வருவாய்த் துறை, காவல் துறையைச் சார்ந்தவர்களுக்குத் தடுப்பூசி போடும் முகாம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

அந்த வகையில், சென்னை ஒமந்தூரர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவாக்சின் தடுப்பூசி இன்று செலுத்தப்பட்டது. மேலும் 28 நாட்கள் கழித்து மீண்டும் கரோனா தடுப்பூசியை அவர் செலுத்திக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனா விதிமுறைகளுடன் வேட்பு மனு தாக்கல் நடைபெறும்’ - ஆட்சியர் செந்தில் ராஜ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.