ETV Bharat / state

கிராண்ட் மாஸ்டர் குகேஷ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! - chennai news tamil

உலக தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறிய தமிழக செஸ் வீரர் குகேஷ்-க்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குகேஷ்
Gukesh D
author img

By

Published : Aug 4, 2023, 3:06 PM IST

சென்னை: இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான 17 வயது நிறைந்த குகேஷ், FIDE உலகக் கோப்பை செஸ் போட்டிகள் அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு சுற்றுகளாக குகேஷ் வெற்றி பெற்று முன்னேறியதன் மூலம் 2755.9 புள்ளிகள் பெற்று உலக தரவரிசையில் 9வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். முதல் 10 இடங்களில் குறைந்த வயது உடைய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மேலும், உலக தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தை 10வது இடத்திற்குத் தள்ளி, குகேஷ் 9வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இதன் மூலம் இந்திய தரவரிசையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். செப்டம்பர் 1ம் தேதி அடுத்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதுவரை குகேஷ் ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலை வகித்தால், 1986க்கு பிறகு ஆனந்தை உலக தரவரிசையில் முந்திய வீரர் என்ற பெருமையைப் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.

  • Congratulations Grandmaster @DGukesh on your incredible achievement of entering the top 10 of world (FIDE) rankings for the first time. Your determination and skill have propelled you to the top echelon of chess, making you the highest-rated Indian player. Your achievement is an… https://t.co/LAaIx0JWyH

    — M.K.Stalin (@mkstalin) August 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “உலக தரவரிசையில் முதல் 10 இடத்திற்கு நுழைந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ்க்கு எனது வாழ்த்துகள். உங்களது திறமையும், உறுதியும் உங்களை செஸ் விளையாட்டின் உயர்மட்ட நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. உங்களது சாதனை திறமையான இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் பெருமையை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: IND vs WI: இந்தியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்.. 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.