சென்னை: ஓணம் பண்டிகை இன்று (ஆகஸ்ட். 29) கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
மலையாளிகளின் பண்டிகையான ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் "நாம் பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தேசமாக மாறி அனைவரையும் சமமாகப் பார்ப்போமாக" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
പരസ്പര സ്നേഹവും പൊരുത്തവും ഉള്ള ഒരു ജനതയായി മാറാനും എല്ലാവരെയും തുല്യരായി കാണാനും നമുക്ക് സാധിക്കട്ടെ.
— M.K.Stalin (@mkstalin) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
പൂക്കളവും സദ്യയും സന്തോഷവും നിറഞ്ഞ #ഓണാശംസകൾ!#HappyOnam #HappyOnam2023 #Onam pic.twitter.com/Rt6sJo95PU
">പരസ്പര സ്നേഹവും പൊരുത്തവും ഉള്ള ഒരു ജനതയായി മാറാനും എല്ലാവരെയും തുല്യരായി കാണാനും നമുക്ക് സാധിക്കട്ടെ.
— M.K.Stalin (@mkstalin) August 29, 2023
പൂക്കളവും സദ്യയും സന്തോഷവും നിറഞ്ഞ #ഓണാശംസകൾ!#HappyOnam #HappyOnam2023 #Onam pic.twitter.com/Rt6sJo95PUപരസ്പര സ്നേഹവും പൊരുത്തവും ഉള്ള ഒരു ജനതയായി മാറാനും എല്ലാവരെയും തുല്യരായി കാണാനും നമുക്ക് സാധിക്കട്ടെ.
— M.K.Stalin (@mkstalin) August 29, 2023
പൂക്കളവും സദ്യയും സന്തോഷവും നിറഞ്ഞ #ഓണാശംസകൾ!#HappyOnam #HappyOnam2023 #Onam pic.twitter.com/Rt6sJo95PU
இது குறித்து அவர் பதிவிட்ட காணொலியில் கேரள மக்களுக்கு மலையாள மொழியில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் 'அறுவடைத் திருநாள்' எனப்படும் ஓணம் பண்டிகை, ஆவணி மாதம் முதல் நாளன்று 'அத்தப் பூ' கோலம் போட்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வீரமும், ஈரமும் மிகுந்த 'மாவலி' சக்ரவர்த்தியை கேரள மக்கள் இன்முகத்துடன் இரு கைகூப்பி வணங்கி வரவேற்கும் நாளாகத் தொடங்கி, அடுத்தடுத்த நாள்களில் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகள், உணவு பரிமாற்றங்கள் ஆகியவற்றை தாராளமாக பகிர்ந்து கொள்வர். இப்பண்டிகையில் கேரள மக்கள் தங்களுக்குள் உள்ள அன்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் அற்புதமான பண்டிகைத் திருநாளாக கொண்டாடுகின்றனர்.
ஓணம் திருநாளில் இளைஞர்கள் எழுச்சியுடன் வஞ்சிப்பாட்டு இசைத்து, பாரம்பரியமிகு படகுப்போட்டியை 10 நாட்கள் விமரிசையாக நடத்துவர். இறுதிநாளில் 'திருவோணம்' என்ற எழுச்சிமிகு கொண்டாட்டத்துடன் 'ஓணம்' திருவிழா இனிதாக எல்லோரும் மகிழத்தக்க வகையில் நிறைவடைகிறது.
இதையும் படிங்க: Onam festival: ஆட்சியர் அலுவலகத்தில் அத்தப் பூ கோலமிட்டு பெண் ஊழியர்கள் நடனம்!