ETV Bharat / state

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் எம்.எம்.ராஜேந்திரனின் மறைவிற்குத் தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர் இரங்கல்..!

Tamil Nadu Chief Minister: தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம்.ராஜேந்திரனின் மறைவிற்குத் தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

tamil-nadu-chief-minister-and governor condoles-the-death-of-former-chief-secretary-of-tamil-nadu
தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் எம்.எம்.ராஜேந்திரனின் மறைவிற்குத் தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர் இரங்கல்..!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 10:00 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம்.ராஜேந்திரன் மறைவெய்தினார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறேன். கடந்த 1957ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான ராஜேந்திரன் உதவி ஆட்சியர், துணை ஆட்சியர் போன்ற பொறுப்புகளை வகித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக உயர்ந்தவர்.

அந்த சமயத்தில், கடந்த 1964ஆம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டவர். அந்த அனுபவத்தைக் கொண்டு பின்னாளில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஒடிசா மாநில ஆளுநராக இருந்தபோது, அங்கு நிகழ்ந்த புயலை எதிர்கொள்வதிலும், மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி முக்கிய பங்களிப்பை ஆற்றியுள்ளார். தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலிலிருந்தபோதும், அதன்பின்பு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி அமைத்த போதும், தலைமைச்செயலாளராக ராஜேந்திரன் பதவி வகித்தார்.

  • தேர்ந்த நிர்வாகத் திறனால் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் முத்திரை பதித்தவரும், ஒடிசா மாநில ஆளுநராக ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டவருமான திரு. M.M. ராஜேந்திரன் அவர்களது மறைவால் வருந்துகிறேன்.

    அவரை இழந்து தவிக்கும்… pic.twitter.com/lLfCBVVpY8

    — M.K.Stalin (@mkstalin) December 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அரசு நிர்வாகத்திலும், அரசியலமைப்புப் பதவிகளிலும், சிறப்பாகவும் நிர்வாகத் திறனோடும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டவர் ராஜேந்திரன். அவரை இழந்து தவிக்கும் அவரது துணைவியாருக்கும், உறவினர்களுக்கும், அவருடன் பணியாற்றிய இந்திய ஆட்சி பணி அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • ஒடிஷா முன்னாள் ஆளுநர் எம்.எம். ராஜேந்திரன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. திறமையான நிர்வாகி மற்றும் எழுத்தாளரான அவர் தனது மகத்தான பொது சேவைக்காக நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா நித்திய சாந்தி… pic.twitter.com/LsvzLbyF4y

    — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது X தளத்தில்,“ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர் எம்.எம். ராஜேந்திரன் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. திறமையான நிர்வாகி மற்றும் எழுத்தாளரான அவர் தனது மகத்தான பொதுச் சேவைக்காக நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மழை வெள்ள பாதிப்பால் சான்றிதழ் சேதமா? தென்மாவட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.