இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தபால் வாக்குகள் செலுத்த தகுதி வாய்ந்த 4 லட்சத்து 66 ஆயிரத்து 884 தேர்தல் பணியாளர்கள் (காவலர்கள் உள்பட) உள்ளனர்.
இதுவரை 3 லட்சத்து 46 ஆயிரத்து 519 தபால் வாக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், 1 லட்சத்து 32 ஆயிரத்து 350 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. தபால் வாக்குகளை மே 2ஆம் தேதி காலை 8 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
80 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்குகள் 92 ஆயிரத்து 559 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் 30 ஆயிரத்து 894 பேருக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 453 தபால் வாக்குகள் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிக்கு உள்ளது.
12 லட்சத்து 40 ஆயிரத்து 308 பேர் தபால் வாக்கு கோரி 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 92 ஆயிரத்து 559 பேர் விண்ணப்பித்துள்ளனர். 80 வயதுக்குள்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மே 5 ஆம் தேதிக்குள் தபால் வாக்குகள் செலுத்த வேண்டும்.
ஆ. ராசா விவகாரத்தில் தேர்தல் ஆணையமே இறுதி முடிவு எடுக்கும். தொண்டாமுத்தூரில் ஆன்லைன் மூலம் பணப்பட்டுவாடா செய்தது குறித்து இதுவரை புகார் வரவில்லை. மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம் புகார் அளித்திருக்கலாம். சிவிஜில் செயலி மூலம் பெறப்படும் புகார்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
சிவிஜில் செயலி மூலம் நேற்று 4 ஆயிரத்து 557 புகார்கள் வந்துள்ளன. இதில் 153 பணப்பட்டுவாடா புகார், 96 கூப்பன்கள் வழங்கப்பட்ட புகார்கள் வந்துள்ளன. தயாநிதி மாறன் மீது அளிக்கப்பட்டுள்ள புகார் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பபட்டுள்ளது.
தேர்தல் நிறுத்துவது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திலிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை. தேர்தல் விதிமீறல் தொடர்பாக பிப்ரவரி 24 முதல் மார்ச் 31 தேதி வரை 44 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்களிக்க மக்கள் ஆர்வமாக உள்ளதால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்கு சதவிகிதம் குறைய வாய்ப்பில்லை. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 24 தனிநபர் பாதுகாப்பு கவச உடைகள் (பி.பி.இ கிட்கள்) தயார் நிலையில் வைக்கப்படும். 1950 புகார் எண் மூலம் அதிக புகார் வந்துள்ளன. கரோனா காலம் என்பதால் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு தேர்தல் நடத்துவதற்கான செலவும் சுமார் 700 கோடி ரூபாய் வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுகாதாரத்துறையில் தேர்தல் பணிக்காக 54.12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று வரை பணம் பறிமுதல் செய்யப்பட்ட புகாரில் சென்னையில் அதிகபட்சமாக 42.78 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் சேலம், மூன்றாமிடத்தில் கரூர் உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: யோகி ஆதித்யநாத் வருகையை ஒட்டி அனுமதியின்றி நடந்த வாகனப் பேரணி: பாஜகவினர் மீது வழக்குப்பதிவு