சென்னை: தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் மாநில தலைவர் ராமகிருஷ்ணன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொது செயலாளர் வன்னியரசு கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்தில், எங்கள் தலைவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பூணூல் தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சாதி, மத கலவரத்தைத் தூண்டும் வகையில் வன்னியரசு கருத்து அமைத்திருப்பதாகவும், இந்த கருத்து குறித்து விசிக தலைவர் திருமாவளவன் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. அதேபோல, இந்திய முஸ்லீம் லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் பூணூலை அறுப்போம் எனப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். குறிப்பாகக் கர்நாடகாவில் நடக்கும் ஹிஜாப் பிரச்சனைக்கும், நமக்கும் சம்பந்தமில்லாத இந்த சூழலில் அரசியல் செய்து வருவதாக அவர் கூறினார்.
மேலும், பல ஆண்டுகளாக அனைத்து சாதி மக்களுடனும் நட்பாக இருப்பதாகவும், ஒரு பிரச்சனையும் இதுவரை வந்ததில்லை. விளம்பரத்திற்காக இது போன்ற கருத்தைப் பதிவிட்டு வரும் வன்னியரசு மற்றும் தடா ரஹீமை உடனே கைது செய்ய வேண்டும்" எனப் புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார்.
-
#பூணூல் pic.twitter.com/thwi8IESPW
— வன்னி அரசு (@VanniArasu_VCK) February 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#பூணூல் pic.twitter.com/thwi8IESPW
— வன்னி அரசு (@VanniArasu_VCK) February 21, 2022#பூணூல் pic.twitter.com/thwi8IESPW
— வன்னி அரசு (@VanniArasu_VCK) February 21, 2022