2020ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கியது. இது பதினைந்தாவது சட்டப்பேரவையின் எட்டாவது கூட்டத்தொடர் ஆகும். தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி வரை நடக்கும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே, நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலால், சட்டப்பேரவையை ஒத்திவைக்க வைக்க முடிவு செய்து, மீதமுள்ள 27 துறைகள் சார்ந்த மானியக்கோரிக்கையை மார்ச் 24 ஆம் தேதியன்று நடந்து முடிந்தது. இதன் பின்னர் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் முடித்துவைக்கப்படுகிறது. ஆளுநர் உத்தரவை ஏற்று சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் ஊராட்சித் தலைவர்!