தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவ நிபுணர் குழு 75 விழுக்காடு பணியாற்ற அரசு அனுமதித்துள்ளது. மேலும் அவர்களுக்கான பேருந்து வசதிகளை அதிகப்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். ஏற்கனவே செவ்வாய்க்கிழமை (மே 26) அன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு இருந்தார். ஒரு வாரத்தில் இரண்டு முறை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை செய்வது இதுவே முதல் முறை.
ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காணொலி காட்சி மூலம் நேற்று (மே 29) அனைத்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் குடிநீர் பிரச்னை, குடிமராமத்து பணிகள், 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்டவற்றை விரைந்து முடிக்க மாவட்ட அலுவலர்களுக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: நோய் முற்றிய பிறகு சென்றால் பலனில்லை - முதலமைச்சர் அறிவுறுத்தல்