இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 14 ஆயிரத்து 454 பேருக்கு ரத்த மாதிரி, சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இன்று மட்டும் ஆயிரத்து 562 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 229 ஆக உயர்ந்துள்ளது. இன்று 528 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில், மொத்தம் 17 ஆயிரத்து 527 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 17 பேர் இன்று இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை:
வரிசை எண் | மாவட்டம் | பாதிப்பு |
1 | சென்னை | 23,298 |
2 | செங்கல்பட்டு | 1,988 |
3 | திருவள்ளூர் | 1,386 |
4 | காஞ்சிபுரம் | 534 |
5 | திருவண்ணாமலை | 503 |
6 | கடலூர் | 491 |
7 | திருநெல்வேலி | 390 |
8 | விழுப்புரம் | 384 |
9 | அரியலூர் | 381 |
10 | தூத்துக்குடி | 355 |
11 | மதுரை | 317 |
12 | கள்ளக்குறிச்சி | 292 |
13 | சேலம் | 221 |
14 | திண்டுக்கல் | 176 |
15 | கோயம்புத்தூர் | 161 |
16 | விருதுநகர் | 153 |
17 | பெரம்பலூர் | 143 |
18 | ராணிப்பேட்டை | 138 |
19 | தேனி | 126 |
20 | தஞ்சாவூர் | 117 |
21 | திருச்சி | 116 |
22 | திருப்பூர் | 114 |
23 | ராமநாதபுரம் | 112 |
24 | தென்காசி | 106 |
25 | கன்னியாகுமரி | 94 |
26 | வேலூர் | 94 |
27 | கரூர் | 87 |
28 | நாமக்கல் | 85 |
29 | நாகப்பட்டினம் | 81 |
30 | ஈரோடு | 75 |
31 | திருவாரூர் | 62 |
32 | திருப்பத்தூர் | 42 |
33 | சிவகங்கை | 42 |
34 | கிருஷ்ணகிரி | 37 |
35 | புதுக்கோட்டை | 36 |
36 | நீலகிரி | 14 |
37 | தருமபுரி | 18 |
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வந்த ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 897 நபர்களில் 1,868 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.