சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2022ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று(செப்.18) நடைபெற்றது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசின் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதம் வாசிக்கப்பட்டது. பின்னர், இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திரையரங்குகளில் டிக்கெட்களை சென்டர்லைஸ் சர்வர் மூலம் மானிட்டரிங் செய்து டிக்கெட் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு Digital service provider (QUBE, UFO) நிறுவனங்கள் அதிகப்படியான தொகையை தயாரிப்பாளர்களிடமிருந்து வசூலிப்பதை கட்டுப்படுத்தி, பாதியாக குறைக்க வேண்டும், திரைப்படங்களின் விமர்சனங்களை படம் வெளியான தேதியிலிருந்து 3 நாட்கள் கழித்து எழுத வேண்டும் உள்ளிட்டப் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க:இனி அரசியலில் ஈடுபடப்போவது இல்லை - நடிகர் நெப்போலியன் திட்டவட்டம்!