சென்னை: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மூன்றாம் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இன்று (அக்.21) தாம்பரம் - கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபேய் குமார் ராய் மோட்டார் டிராளி மூலம் மித வேகத்தில் சென்று ரயில் பாதையை ஆய்வு செய்தார்.
இதனையடுத்து புதியதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் தண்டவாளத்தில் கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் வரை 120 கி.மீ அதிவேகத்தில் 8 பெட்டிகள் கொண்ட ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
புதிதாக அமைக்கப்பட்ட ரயில் தண்டவாளத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்படும் என அபேய் குமார் ராய் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணியை நொடியில் காப்பாற்றிய காவலர்!