ETV Bharat / state

‘கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்’

சென்னை: கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை அச்சுறுத்தும் பள்ளி நிர்வாகங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
author img

By

Published : May 10, 2020, 4:44 PM IST

கரோனா பெருந்தொற்று காரணமாக, வருவாயிழந்து தவிக்கும் மக்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கும், பள்ளி நிர்வாகத்தைச் சாடிய, பாமக நிறுவனர் ராமதாஸ், அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பெற்றோர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலையில், அவர்களின் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை, இம்மாதம் 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் தகவல் அனுப்பியுள்ளன.

கட்டணம் செலுத்தாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் என்றும், பல பள்ளிகள் எச்சரிக்கைவிடுத்துள்ளன. பள்ளிகளின் இந்த மனிதநேயமற்ற செயல் கண்டிக்கத்தக்கது.

வறட்சி, மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்போது அதிகபட்சமாக ஓரிரு வாரங்களில் பாதிப்புகள் குறைந்து இயல்புநிலை திரும்பிவிடும். ஆனால், கரோனா போன்ற பேரிடர் எப்போது தணியும் என்று தெரியவில்லை.

மூன்றாவதுகட்ட ஊரடங்கு இம்மாதம் 17ஆம் தேதிவரை நீடிக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகும் எப்போது இயல்புநிலை திரும்பும், எப்போது வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படும்? என்பது தெரியவில்லை.

இத்தகைய சூழலில் கல்விக் கட்டணத்தை வரும் 15ஆம் தேதிக்குள் செலுத்தாத குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் சேர்க்கப்படமாட்டார்கள். அவர்களுக்கான வகுப்புகள் மீண்டும் நடத்தப்பட மாட்டாது எனப் பள்ளி நிர்வாகங்கள் எச்சரிப்பது அழகல்ல. வணிக நிறுவனங்கள் இதுபோன்று கூறலாம், கல்விக் கூடங்கள் ஒருபோதும் கூறக்கூடாது.

எனவே, வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளிடம் மட்டுமாவது, நிலைமை சரியாகும்வரை கல்விக்கட்டணம் வசூலிப்பதைக் கருணை அடிப்படையில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் நிறுத்திவைக்க வேண்டும்.

அதையும் மீறி கல்விக் கட்டணம் செலுத்தும்படி, பெற்றோரை அச்சுறுத்தும் பள்ளி நிர்வாகங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ’அங்கீகாரம்’ இல்லாத இந்திய உயர் கல்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.