ETV Bharat / state

தஹில் ரமாணி ராஜினாமா எதிரொலி - வழக்குகள் தேக்கம்! - Supreme Court

சென்னை: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில், இன்று அவரது அமர்வில் பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் மீது விசாரணை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

tahil-ramani
author img

By

Published : Sep 9, 2019, 11:59 AM IST

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் குழு கூடி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாறுதல் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

அதேபோன்று மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள அஜய் குமார் மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாறுதல் செய்யவும் மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

tahil-ramanis-resignation
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும் உச்ச நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் குழுவிற்கும் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் தன்னை மூன்று நீதிபதிகளே கொண்ட மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாறுதல் செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கோரிக்கையை உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழு செப்டம்பர் 3ஆம் தேதி நிராகரித்த நிலையில், இந்தியாவின் பழமைவாய்ந்த தற்போது 75 நீதிபதிகளுக்கு மேல் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்துவிட்டதாகவும் இதன்பிறகு மூன்று நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிடமாறுதல் செய்வது உகந்ததாக இருக்காது என்பதால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாகவும் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

tahil-ramanis-resignation
கொலிஜியம் குழு பரிந்துரை செய்த கடிதத்தின் நகல்

இந்த நிலையில், இன்று தலைமை நீதிபதி, நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு 75 வழக்குகளை விசாரிப்பதற்கான பட்டியலை பதிவுத் துறை வெளியிட்டிருந்தது. தற்போது திடீர் திருப்பமாக, தலைமை நீதிபதி தஹில் ரமாணி பணிக்கு வராத நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் மீது விசாரணை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தலைமை நீதிபதியின் திடீர் பணியிடமாறுதலை கண்டிக்கும் வகையில் வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

Intro:Body:சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹீல்ரமானி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ள திங்கட்கிழமை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அமர்வில் வழக்குகள் விசாரணை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் குழு கூடி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹீல்ரமானியை மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற மத்திய அரசிற்க்கு பரிந்துரை செய்தது.

அதே போன்று தற்போது மேகாலயா மாநில தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே. மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடம் மாற்றம் செய்யவும் மத்திய அரசிற்கு கொலிஜியம் பரிந்துரை வழங்கியது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹீல்ரமானி, உச்சநீதிமன்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் குழுவிற்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தன்னை 3 நீதிபதிகளே கொண்ட மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற வேண்டாம் என குறிப்பிட்டிருந்தார்.

தலைமை நீதிபதியின் கோரிக்கையை உச்சநீதிமன்ற கொலிஜியம் செப்டம்பர் 3 ம் தேதி நிராகரித்த நிலையில், இந்தியாவின் பழமை வாய்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதிகளுக்கு மேல் உள்ள நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்துவிட்டேன்.

இதன் பிறகு 3 நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவது உகந்ததாக இருக்காது என்பதால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது.

குடியரசுத் தலைவருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், திங்கட்கிழமை (இன்று) தலைமை நீதிபதி மற்றும் துரைசாமி அடங்கிய அமர்வு 75 வழக்குகளை
விசாரிப்பதற்கான பட்டியலை பதிவுத்துறை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக, இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்பட்ட அமர்வில் விசாரணை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்புச் செய்தி :

தலைமை நீதிபதியின் திடீர் மாற்றத்தை கண்டிக்கும் வகையில் வழக்கறிஞர்கள் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.