ETV Bharat / state

பெரியண்ணன் போல் செயல்படும் மத்திய அரசு - திமுக விமர்சனம்! - விவசாயிகள் போராட்டம்

நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து விவாதிக்க உச்ச நீதிமன்றமே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அதனை ஏற்காமல், மற்ற கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு பெரியண்ணன் போல் செயல்பட்டு நாடாளுமன்ற கூட்டத்தை ரத்து செய்துள்ளது என திமுக விமர்சித்து குற்றம்சாட்டியுள்ளது.

T. R. Baalu condemns on  parliamentary session Canceled

author img

By

Published : Dec 17, 2020, 3:35 PM IST

சென்னை: இந்திய- சீனா உறவு, விவசாயிகள் போராட்டம் என நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், அது குறித்து அனைத்துக்கட்சிகளுடன் விவாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்நிலையில் மத்திய அரசு குளிர்கால கூட்டுத் தொடரை ரத்து செய்துள்ளது. இதுகுறித்து, திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர் பாலு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'கரோனா நோய் தொற்றைக் காரணம் காட்டி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய பாஜக அரசு ரத்து செய்திருப்பதற்கு திமுக சார்பில் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலையாய பிரச்னைகள்

“இந்திய - சீன உறவு மிக மோசமாகி, எல்லையில் பதற்றம் நிலவுகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியின் எல்லையில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து இரவு பகலாக தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவை இன்று நாட்டின் மிக தலையாய பிரச்னைகளாக அணிவகுத்து நிற்கின்றன.

இப்பிரச்சினைகள் குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்த பாஜக அரசு விரும்பவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.

கவலைப்படாத அரசு

விவசாயிகள் போராட்டம் தேசிய பிரச்னையாக மாறலாம் என்று எச்சரித்துள்ள உச்சநீதிமன்றம், திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் உள்ளது.

அதுமட்டுமின்றி, திசைதிருப்பும் பரப்புரைகளில் ஈடுபட்டு போராடும் விவசாய அமைப்புகளைக் கொச்சைப்படுத்துவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான ஜனநாயக மரபு அல்ல.

ஆளும், எதிர் கட்சிகள் இந்தியாவின் சக்கரங்கள்

நாட்டின் ஜனநாயகம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் அர்த்தமுள்ள விவாதங்களின் மூலம்தான் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை பிரதமர் மோடி உணர முன்வராதது கவலையளிக்கிறது. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் வலிமை மிக்க இந்திய ஜனநாயகத்தின் இரு சக்கரங்கள். பாஜக ஆட்சியில் ஜனநாயக நெறிமுறைகள் மீறப்படுவதுமட்டுமின்றி, நசுக்கவும்படுகின்றன.

பெரியண்ணன் பாணியில் நடக்கும் மத்திய அரசு

இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியான திமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் குளிர்காலக் கூட்டத்தை ரத்து செய்வது குறித்துக் ஆலோசனை நடத்தாமல் எதேச்சதிகாரமாக முடிவெடுத்ததை ஏற்றுக்கொள்ள இயலாது. மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை அறிய மனமின்றி, அவசரச் சட்டங்களை நிறைவேற்றியே ஆட்சியை நடத்தலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பது ஜனநாயகப் படுகொலை.

எதிர்க்கட்சிகளைப் புறக்கணித்து பெரியண்ணன் பாணியில் செயல்படும் போக்கை மத்திய பாஜக அரசு உடனடியாக கைவிட்டு கருத்தொற்றுமை, ஜனநாயகம் என்ற உன்னதமான பாதைக்குத் திரும்ப வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.