சென்னை: அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் எம்சி ராஜா தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அதே பகுதியில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் தில்லை நடராஜன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதி மக்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த சாலையை தனது நிலம் எனக்கூறி அங்கிருந்த மரங்களை அகற்றிவிட்டு வழியை அடைத்து சுவர் எழுப்பி உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பவே தில்லை நடராஜன் ஆள்களை வைத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த ஆள்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். இதனால் சங்கீதா என்ற பெண்ணுக்கு இடது கை முறிவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், உயர் பதவியிலிருக்கும் காவல் அலுவலர் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறு செய்வது காவல் துறைக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். மறுப்புறம் இதுகுறித்து தில்லை நடராஜன் தரப்பில், தன்னிடம் உரிய ஆவணங்கள் இருப்பதாகவும், இந்த விவகாரத்தை சட்டப்படியே சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோயில் நில ஆக்கிரமிப்புகளை நான்கு வாரங்களில் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு