தமிழ்நாட்டில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுதோறும் ஊரடங்கு என அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டாஸ்மாக் கடைகள், பார்கள் குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை, டாஸ்மாக் கடைகள் அனைத்து நாள்களிலும் மதியம் 12 மணிமுதல் இரவு 10 மணிவரை இயங்கிவருகிறது.
இருப்பினும், இரவு 9 மணிவரை கடைகள் மூடப்படும். அதேபோல், முழு ஊரடங்கு நாள்களில் முழுமையாக மூடப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, வருடத்தில் எட்டு நாள்கள் மூடப்படுவது வழக்கம். இந்த முறை தேர்தல் என்பதால் கடந்த (ஏப்ரல் 4 முதல் 6 வரை) மூன்று நாள்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது.
மேலும், கரோனா பரவல் மையமாகச் செயல்பட்டுவருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என மருத்துவர்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தயாம்பகா கலையில் மாஸ்டரான கேரள பெண்