சென்னை: இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை, அரசுப் பொதுவிடுமுறை நாள்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படவுள்ளன.
மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசுப் பொதுவிடுமுறை நாள்களில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
தற்போது, மெட்ரோ ரயில் சேவை வார நாட்களில் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன. நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகின்றன. நெரிசல் இல்லாத நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும். முகக்கவசத்தை அணியாமல் இருந்தாலோ அல்லது சரியாக அணியவில்லை என்றாலோ உடனடியாக 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இதுவரை முகக்கவசம் அணியாமல் பயணம் செய்த 46 பயணிகளிடமிருந்து 9,200 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிக மின் கட்டணம் ஏன்?