சென்னை: கோழிப் பண்ணைகளின் முன்னோடியாக சுந்தர் நாயுடு கருதப்பட்டார். கால்நடை மருத்துவரான இவர், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றினார். 86 வயது நிரம்பிய இவர், கோழிப் பண்ணைகள் வளர்ப்பு குறிப்பு விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஏழை விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் செய்தவர். மேலும் இவர் பாலாஜி கோழிப்பண்ணையை தமிழகம் மற்றும் ஆந்திராவில் நிறுவினார்.
இவர் கடந்த சில தினங்களாக உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் இயற்கை எய்தினார். இந்நிலையில் இன்று அவரது சொந்த ஊரான சித்தூரில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் ஈநாடு, ஈடிவி பாரத், மார்க்கதரிசி சிட்ஃபண்ட் ஆகியவற்றின் ஊழியர்கள் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க:Sundar naidu: சுந்தர் நாயுடு காலமானார்!