சென்னை: திருப்போரூரைச் சேர்ந்தவர் கண்ணாதாசன். இவர் தனது தாய் ராணியை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிக்கிச்சைகாக அழைத்து சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அவர், குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்துள்ளது.
சுதாரித்துக்கொண்ட கண்ணதாசன் காரை நடு ரோட்டில் நிறத்திவிட்டு, தாயாருடன் கீழே இறங்கியுள்ளார். பின்னர் சில நிமிடங்களிலேயே காரின் முன் பகுதி தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
இதையடுத்து கார் தீப்பிடித்து எரிவது தொடர்பாக தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்தத் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து, விபத்திற்குள்ளான காரினை சாலையோரம் அப்பறபடுத்தினர்.
இதைத்தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கண்ணதாசன் துரிதமாகச் செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: ஜிலேபி கடைக்குள் புகுந்த கார்!