சென்னை: தமிழ்நாட்டில் 2008 செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட்டது 108 ஆம்புலன்ஸ் சேவை. 13 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் இச்சேவையின் மூலம் மாநிலத்தில் இதுவரை லட்சக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர்.
மாநகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை இந்தச் சேவையானது நடைபெற்றுவருகிறது. யாரேனும் நோய்வாய்ப்பட்டாலோ, யாருக்கேனும் விபத்து ஏற்பட்டாலோ உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு மக்கள் இந்தச் சேவையை மேற்கொள்வர்.
செயல்பாடு
இதன் தேவைக்கேற்றவாறு அவசர விதிகளை முறையாக ஒதுக்கீடு செய்வதன் மூலமாக, 2011ஆம் ஆண்டு ஆம்புலன்ஸ் சென்றடையும் கால அளவு 15.4 நிமிடங்கள் என இருந்தது.
பின் 2020ஆம் ஆண்டில் 14.45 நிமிடங்கள் ஆக இருந்தது. சென்னையில் 11 நிமிடங்களில் இருந்தது. ஆனால் தற்போது 7.32 ஆக உள்ளது. அதாவது முன்பு தாமதமாகச் செயல்பட்டுவந்த இச்சேவை, தற்போது விரைந்து செயல்பட்டுவருகிறது என அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்