தமிழ்நாட்டிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் கடந்த 2016ஆம் ஆண்டே முடிவடைந்த நிலையில் தற்போது வரை அந்த அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்த விவகாரம் குறித்து கடந்த வாரம் திமுக எம்.பி ஆ.ராசா மக்களவையில் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ’உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால், அதற்கான நிதியை ஒதுக்க முடியாது’ என்றார்.
இந்நிலையில் தற்போது தலைமை கணக்காயர் (சிஏஜி) குழுத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2017-18ஆம் ஆண்டு 14வது நிதிக்குழுவில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் 3 ஆயிரத்து 528 கோடி ரூபாய் பரிந்துரைத்து ஆயிரத்து 955 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், மத்திய அரசு ஊராட்சி அமைப்புக்கு 758 கோடி ரூபாயும், நகர்ப்புற அமைப்புக்கு 815 கோடி ரூபாயும் வழங்கவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பது மத்திய அரசு வழங்க வேண்டிய மானிய உதவி குறைவிற்கு காரணமாக உள்ளது” என கூறப்பட்டுள்ளது.