ETV Bharat / state

கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த பேராசிரியர்: மாணவர்கள் போராட்டம்

சென்னை கிருத்துவக் கல்லூரியில் மாணவியிடம் தவறாக நடந்த பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Students protest demanding action against professor who misbehaved with college studentmcc  students protest demanding action against professor who tried mislead student பேராசிரியர் மீது  கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்
Students protest demanding action against professor who misbehaved with college student mcc students protest demanding action against professor who tried mislead studentபேராசிரியர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்
author img

By

Published : Apr 1, 2022, 8:39 AM IST

Updated : Apr 1, 2022, 11:16 AM IST

சென்னை: தாம்பரத்தில் சென்னை கிருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி மாணவியிடம் பேராசிரியர் ஒருவர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாணவிகளின் ஆடைகள் குறித்து கல்லூரி நிர்வாகம் தவறாக கருத்து தெரிவித்துள்ளது.

இதனைக் கண்டித்து நேற்று (மார்ச் 31) கல்லூரி வளாகத்திலேயே 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கல்லூரியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாலின விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட பேராசிரியர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டும்.

கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த பேராசிரியர்: மாணவர்கள் போராட்டம்

மாணவிகளின் ஆடை குறித்து குறை கூறுவதை கல்லூரி நிர்வாகம் நிறுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து கல்லூரி முதல்வர், மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் எனவும் மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட பேராசிரியரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: ராஜஸ்தான் பெண் மருத்துவர் தற்கொலை விவகாரம் - பாஜக தலைவர் கைது!

Last Updated : Apr 1, 2022, 11:16 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.