சென்னை: வேளச்சேரியிலிருந்து, அரக்கோணம் மார்க்கமாக நேற்று (டிசம்பர் 28) மாலை மின்சார ரயில் சென்றது. இந்த ரயிலில் மாநில கல்லூரியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்தனர்.
வசீகரன் என்ற மாணவன் பிறந்தநாளை முன்னிட்டு சக மாணவர்கள் ரயிலில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது ஒரு மாணவன் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து மின்சார ரயிலை ஆவடி ரயில் நிலையத்தில் உடனடியாக நிறுத்தினர்.
பின்னர், ரயில்வே பாதுகாப்பு படையினர் சென்று அபாய சங்கிலி இழுத்த வசீகரன் உள்ளிட்ட 4 மாணவர்களை பிடித்து சென்று விசாரணை நடத்தினர். அவர்களை உடனே விடுவிக்கக்கோரி சக மாணவர்கள் ரயில் நிலையத்தில், அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
உடனே ஆவடி ரயில்வே காவலர்கள் மறியலில் ஈடுபட்ட சக மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விடுதலை செய்வதாக உறுதியளித்தனர். அதன்பிறகு மாணவர்கள் ரயில் மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட முன்னாள் அரசு ஊழியர் கைது