ETV Bharat / state

கலை, பண்பாடு, இசைப்பள்ளியில் பயின்றோருக்கு முன்னுரிமை - இந்து அறநிலையத் துறை

அனைத்து திருக்கோயில்களில் நடைபெறும் திருக்கோயில் நிகழ்ச்சிகள், முக்கியத் திருவிழாக்களில் கலை, பண்பாடு, இசைப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

கோயில் நிகழ்ச்சிகளில் கலை,பண்பாடு மற்றும் இசைப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை : இந்து சமய அறநிலையத்துறை

author img

By

Published : Feb 28, 2022, 2:03 PM IST

சென்னை: முக்கியத் திருவிழாக்கள், சிவாலயங்களில் நடைபெறும் மகா சிவாராத்திரி விழாவில், கலை பண்பாட்டுத் துறையில் பதிவுசெய்த கலைஞர்கள், இசைக் கல்லூரி, இசைப் பள்ளிகளில் பயின்ற கலைஞர்களைப் பயன்படுத்திட அனைத்து அலுவலர்களுக்கும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள கலைஞர்கள், கலைக் குழுவினரின் விவரம் பெறுவதற்கு ஏதுவாக கலை பண்பாட்டுத் துறையின் மண்டல உதவி இயக்குநர்கள், இசைப்பள்ளி முதல்வர்கள், மாவட்ட அரசு இசைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் கலைஞர்களின் விவரம் பெற்று அவர்களைத் திருக்கோயில்களில் கலை நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தமிழர் பாரம்பரியக் கலைகளைப் பாதுகாக்கவும், அக்கலைகளை இன்றைய இளைய சமுதாயத்தினர் கொண்டு சேர்க்கவும் இத்தகைய ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துத் திருக்கோயில்களில் நடைபெறும் கோயில் நிகழ்ச்சிகள், முக்கியத் திருவிழாக்களில் கலை, பண்பாடு, இசைப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.