சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் சரணுக்கும் கௌஷிக் என்ற மாணவருக்கும் இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு கணேஷ் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆண்டர்சன் சாலை வழியாக நடந்து சென்ற போது கௌஷிக், அவரது நண்பர்கள் சுமார் ஐந்து பேர் காரில் வந்து கணேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
பின்னர், அந்த கும்பல் கணேஷைத் தாக்கி, சாவியால் தலையில் குத்தியுள்ளனர். இதனால் உடனடியாக கணேஷ் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:
தூங்கும்போது தலையில் கல்லைப்போட்டு கொலை - ஒருவருக்கு வலைவீச்சு!