ETV Bharat / state

EXCLUSIVE: முதுகலை பட்டப்படிப்பு: நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

முதுகலை பட்டப்படிப்பில் சேர நாளை முதல் செப்டம்பர் ஒன்றாம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனர் பூர்ண சந்திரன் அறிவித்துள்ளார்

postgraduate
ஆன்லைனில் விண்ணப்பம்
author img

By

Published : Aug 22, 2021, 10:42 AM IST

Updated : Aug 22, 2021, 12:17 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலைப் பட்டப்படிப்பில் 2021-22ஆம் கல்வியாண்டில், முதுநிலை மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அதற்கு www.tngasapg.in , www.tngasapg.org என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் ஒன்றாம் தேதிவரையில் பதிவு செய்யலாம்

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.

postgraduate
நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

அனைத்து உதவி மையங்களிலும் தேவையான அளவிற்கு கரோனா பாதுகாப்பு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒரு கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு 60 ரூபாயும், எஸ்சி, எஸ்டி மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தாமல், பதிவு கட்டணம் 2 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது. மேலும் விபரங்களுக்கு 044 28260098 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: குரோம்பேட்டை ஐடிஐயில் மாணவர் சேர்க்கை

Last Updated : Aug 22, 2021, 12:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.