சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக குடியுரிமை சட்டத்திருந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அங்கிருந்து கைது செய்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால், அங்கு மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட காரணத்தினால் பதற்றமான சூழல் நிலவியது.
பின்னர் பல்கலைக்கழகத்திலிருந்து கைது செய்யப்பட்ட 17 மாணவர்களும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் மீது எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதுமட்டுமின்றி சென்னை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் உடனடியாக விடுதியை காலி செய்யக்கோரி நிர்வாகம் வற்புறுத்தி உள்ளது. இதையடுத்து, விடுதியில் உள்ள மாணவர்கள் வருகின்ற திங்கட்கிழமை அனைவரும் காலி செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கை மூலம் மாணவர்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் மயானா அமைதி நிலவுகிறது - தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு குற்றச்சாட்டு!