ETV Bharat / state

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையில் வயது வரம்பு அதிகரிப்பு! - கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Kendriya Vidyalaya schools  Kendriya Vidyalaya schools admission  age limit increased in Kendriya Vidyalaya schools admission  age limit of Kendriya Vidyalaya schools admission  பள்ளியில் மாணவர் சேர்க்கை  மாணவர்கள் சேர்க்கையில் வயது வரம்பு அதிகரிப்பு  கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை  கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கையில் விவரம்
கேந்திரிய வித்யாலயா
author img

By

Published : Feb 27, 2022, 4:23 PM IST

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர், மத்திய மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து சேர்க்கை நடத்தப்படுகிறது. மீதமுள்ள இடங்கள் பிற மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.

இந்தப் பள்ளிகளில், 1ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும்போது அந்த ஆண்டு மார்ச் 31 அல்லது ஏப். 1இல், ஐந்து வயது நிறைந்திருக்க வேண்டும் என்ற விதி, பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும், 2022- 23ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், 1ஆம் வகுப்பில் சேரும் மாணவர்கள், புதிய கல்வி கொள்கையின்படி, ஆறு வயதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

திடீரென வயது வரம்பை உயர்த்துவதால், ஆயிரக்கணக்கான மாணவர்கள், இந்த ஆண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய கல்விக்கொள்கை 2020இன் படி, 2022-23ஆம் கல்வியாண்டு முதல், ஆறு வயதிற்கு மேற்பட்டவர்கள் சேரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை, kvsangathan.nic.in என்ற இணையதளத்திலும், ஆன்லைன் பதிவு விவரங்களை, kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாடு திரும்பிய தமிழ்நாட்டு மாணவர்கள்: விமான நிலையத்தில் அரசு சார்பில் வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.