ETV Bharat / state

நவம்பர் 15 முதல் வேலைநிறுத்தம்- கண்டெய்னர் வாடகையை உயர்த்த அனைத்து துறைமுக டிரெய்லர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை!

சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அனைத்து துறைமுக டிரெய்லர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் தொடர்ந்து டீசல் விலை ஏற்றத்தாலும், கடந்த 8 வருடங்களாக வாடகை ஏற்றாமல் இருப்பதாலும் லாரி வாடகையை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்
சென்னை, அனைத்து துறைமுக டிரெய்லர் உரிமையாளர்கள் கூட்டமைப்பினைச்
author img

By

Published : Oct 27, 2021, 9:51 AM IST

Updated : Oct 28, 2021, 12:02 PM IST

சென்னை: ராயபுரத்தில் அனைத்து துறைமுக டிரெய்லர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தொடர்ந்து டீசல் விலை ஏற்றத்தாலும், கடந்த 8 வருடங்களாக வாடகை ஏற்றாமல் இருப்பதாலும் லாரி வாடகையை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்பின்னர், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் கோபிநாத் ஆகியோர் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்கள்.

ஒருங்கிணைப்பாளர் ஷாகுல் ஹமீது, “டீசல் விலை ரூ.100 தாண்டி இருப்பதால் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களாகிய எங்களால் வாகனங்களை இயக்க முடியவில்லை. இதனால் எங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், துறைமுக இயக்குநரும் தலையிட்டு வாடகை உயர்த்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

மத்திய அரசுக்கு பலகோடி வருவாய்

மேலும், “துறைமுகம் வாயிலாக மத்திய அரசு பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. மத்திய அரசின் செஸ் வரியின் குறியைக் குறைத்து டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் வண்டிகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம்” என அவர் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர் கோபிநாத், “கண்டெய்னர் லாரி வாடகை கடந்த 8 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது. தொடர்ந்து டீசல் விலை ரூ.100-ஐ தாண்டி செல்வதால் லாரி உரிமையாளர்களால் வாகனங்களை இயக்க முடியவில்லை. எனவே தற்போது வழங்கப்பட்டு வரும் வாடகை தொகையிலிருந்து 40 முதல் 50 சதவிகிதம் உயர்த்தித் தர தமிழ்நாடு அரசும், துறைமுக பொறுப்பு கழகங்களும் சுமூகமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக 11 சங்கத்தினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இன்னும் 15 நாள்களில் வாடகை உயர்வு குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்காத பட்சத்தில், வேலைநிறுத்தம் செய்ய இருக்கிறோம்; மேற்கொண்டு, எங்களால் வாகனங்களை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவதால் நவம்பர் 15 ஆம் தேதி முதல் லாரிகளை இயக்க மாட்டோம்” என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாழ்த்துகள் 'தலைவா' - ரஜினியை வாழ்த்தி சச்சின் ட்வீட்!

Last Updated : Oct 28, 2021, 12:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.